வீரர்-வீராங்கனைகள் ஆடுகளம் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்-மாவட்ட விளையாட்டு அலுவலர் அறிவுறுத்தல்

வீரர்-வீராங்கனைகள் ஆடுகளம் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட விளையாட்டு அலுவலர் உமாசங்கர் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2022-05-14 17:25 GMT
கிருஷ்ணகிரி:
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஆடுகளம் செயலி
தமிழ்நாடு விளையாட்டு ஆடுகளம் செயலி ‘TNSPORTS’ ஆகும். வீரர்-வீராங்கனைகள் விளையாட்டு தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்வதற்கும், விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்கும், இனி வருங்காலங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு செயலியான TNSPORTS-ஐ பதிவேற்றம் செய்து பயன்படுத்த வேண்டும்.
இந்த செயலியை பதிவிறக்கம் செய்வதற்கு விளையாட்டு வீரர்களின் இ-மெயில், முகவரி, கைப்பேசி எண், பிறந்த தேதி மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களை குறிப்பிட்டு பதிவேற்றம் செய்ய வேண்டும். இனி வருங் காலங்களில் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்பவர்கள் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் இந்த செயலியில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே டி.ஜி. லாக்கர் மூலம் வழங்கப்பட உள்ளது.
பதிவிறக்கம்
எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லுாரி, மாணவ-மாணவிகள், விளையாட்டு சங்கங்கள் மற்றும் விளையாட்டில் ஆர்வமுள்ள பொதுமக்கள் அனைவரும் உடனடியாக ‘TNSPORTS’ ஆடுகளம் செயலியை இன்றுக்குள் (ஞாயிற்றுக்கிழமை) பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்