கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்
கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.;
பர்கூர்:
கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் பொன்னுமணி மற்றும் அதிகாரிகள் பர்கூர்-ஜெகதேவி சாலையில் உள்ள கொட்டாவூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். நள்ளிரவு அந்த வழியாக வந்த லாரியை மறித்தனர். அப்போது அதில் வந்தவர்கள் லாரியை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்தபோது கிரானைட் கற்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் கிரானைட் கற்களை லாரியுடன் பறிமுதல் செய்து, பர்கூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி உரிமையாளர் கார்த்திக் மற்றும் டிரைவரை தேடி வருகிறார்கள்.