கிருஷ்ணகிரியில் ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு புத்தாக்க பயிற்சி

கிருஷ்ணகிரியில் ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2022-05-14 17:23 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி, தளி, ஓசூர், காவேரிப்பட்டணம், ஊத்தங்கரை பகுதிகளில் ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடக்கிறது. கிருஷ்ணகிரியில் நடைபெற்ற புத்தாக்க பயிற்சியை மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் வெங்கடாசலம் தொடங்கி வைத்து பயிற்சி உபகரணங்களை வழங்கினார். நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி தலைமை தாங்கினார். அகசிப்பள்ளி, இட்டிக்கல் அகரம், பையனப்பள்ளி, ஆலப்பட்டி, பெல்லம்பள்ளி, பெல்லாரம்பள்ளி, சிக்கப்பூவத்தி, தேவசமுத்திரம், கங்கலேரி, கூளியம், ஜிஞ்சுப்பள்ளி, கட்டிகானப்பள்ளி உள்பட 15 ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு பயிற்சியாளர்கள் தமிழரசி, முதன்மை பயிற்சியாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர்.
இதில் கிராம ஊராட்சியின் வளர்ச்சி குறித்தும், அரசு நல திட்டங்கள் பற்றியும், வரி இனங்கள், வரியில்லா இனங்கள் பற்றிய பொறுப்பு, கடமை குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்