பாலாறு அன்னை ரதயாத்திரை

ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் பாலாறு அன்னை ரதயாத்திரையை சக்தி அம்மா தொடங்கி வைத்தார்.

Update: 2022-05-14 17:22 GMT
வேலூர்

வேலூரில் பாலாறு பெருவிழா அடுத்த மாதம் 5 நாட்கள் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பாலாறு அன்னை ரத யாத்திரை தொடக்க விழா வேலூர் தங்கக்கோவிலில் நடைபெற்றது. இதற்கு சத்தி அம்மா தலைமை தாங்கி ரதத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து ஆரத்தி காண்பித்து தொடங்கி வைத்தார்.

 இந்த ரதம் கர்நாடக மாநிலம் நந்தி துர்க்கம் மலைக்கு சென்று அங்கு தீர்த்தம் பெற்று  திருப்பத்தூர் மாவட்டம் கனகநாச்சியம்மன் கோவிலுக்கு வருகிற 16-ந் தேதி வருகை தர உள்ளது. பின்னர் அங்கிருந்து ரதம் வாணியம்பாடி, ஆம்பூர் மற்றும் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு செல்ல உள்ளது. 

ரதயாத்திரை தொடக்க நிகழ்ச்சியில் தங்கக்கோவில் இயக்குனர் சுரேஷ்பாபு, பீட மேலாளர் சம்பத் மற்றும் கோரஷானந்தா சரஸ்வதி, மோகானந்த சரஸ்வதி மற்றும் பாலாறு பாதுகாப்பு அறக்கட்டளை நிர்வாகிகள், அகில பாரதீய சந்நியாசிகள் சங்கத்தினர், நாராயணி பீடம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அகில பாரதீய சன்னியாசிகள் சங்கமும், நாராயணி பீடமும் இணைந்து செய்திருந்தது.

மேலும் செய்திகள்