மனைவி இறந்த 2 மாதத்தில் ஆசிரியர் தற்கொலை

அருப்புக்கோட்டையில் மனைவி இறந்த 2 மாதத்தில் தூக்குப்போட்டு ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-14 17:21 GMT
அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டையில் மனைவி இறந்த 2 மாதத்தில் தூக்குப்போட்டு ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார்.

புதுப்பெண் தற்கொலை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி சிலோன் காலனியை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 25).இவர் சாரண, சாரணிய ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.இவருடைய மனைவி திவ்யபூரணி(19). 
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் வீட்டில் திவ்யபூரணி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். திருமணம் முடிந்த 6 மாதத்திற்குள் அவர் தற்கொலை செய்து கொண்டதால் ராஜபாண்டி மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆசிரியரும் தற்கொலை

இந்த நிலையில் ராஜபாண்டி திடீரென நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.விரைந்து வந்த போலீசார் ராஜபாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே அடுத்தடுத்து கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்