திருவெண்ணெய்நல்லூர் அருகே பால் வண்டி-மோட்டார் சைக்கிள் மோதல்; ஐ.டி. ஊழியர் சாவு
திருவெண்ணெய்நல்லூர் அருகே பால் வண்டி-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஐ.டி. ஊழியர் உயிாிழந்தாா்.;
திருவெண்ணெய்நல்லூர்,
சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் ரமணி கார்த்திகேயன் (வயது 34). ஐ.டி. நிறுவன ஊழியர். இவர் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பேரங்கியூர் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற, பால்வண்டியை அவர் முந்தி செல்ல முயன்றுள்ளார். இதில் எதிர்பாராத விதமாக பால் வண்டியில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த ரமணி கார்த்திகேயன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.