கல்வராயன்மலையில் மருத்துவ முகாம்
கல்வராயன்மலையில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
கச்சிராயப்பாளையம்,
கல்வராயன்மலையில் உள்ள கரியாலூர் அரசு சமுதாய நல மருத்துவமனை சார்பில் வெள்ளிமலை கிராமத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு வட்டார மருத்துவர் சுரேஷ் தலைமை தாங்கினார். டாக்டர்கள் பிரபாகரன், அருண்குமார், ராஜேஷ், ஆஷாஆர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் டாக்டர் பொய்யா மொழி குமரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு மலைவாழ் மக்களை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். இதேபோல் மேல்பாச்சேரி, தொரடிப்பட்டு, கரியாலூர் ஆகிய கிராமங்களிலும் மருத்துவமுகாம் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதி ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.