தக்கோலம் பேரூராட்சியில் சிறப்பு தூய்மை திட்ட பணிகள்

தக்கோலம் பேரூராட்சியில் சிறப்பு தூய்மை திட்ட பணிகளை சென்னை பேரூராட்சிகளின் ஆணையர் மற்றும் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.

Update: 2022-05-14 17:00 GMT
அரக்கோணம்

தக்கோலம் பேரூராட்சியில் சிறப்பு தூய்மை திட்ட பணிகளை சென்னை பேரூராட்சிகளின் ஆணையர் மற்றும் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.

டெங்கு மற்றும் நோய் பரவலை தடுப்பதற்காக மார்ச் 2022 முதல் ஒர் ஆண்டுக்கு சனிக்கிழமைகள் தோறும்  சிறப்பு தூய்மை திட்ட பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக நேற்று தக்கோலம் முதல்நிலை பேரூராட்சியில் சிறப்பு தூய்மை திட்ட பணிகள் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. 

இதனை சென்னை பேரூராட்சிகளின் ஆணையர் மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் பார்வையிட்டனர். அப்போது பேரூராட்சி தலைவர் நாகராஜன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி இளநிலை உதவியாளர் சொக்கலிங்கம், வெங்கடேசன் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்