தனுஷ்கோடியில் கலங்கரை விளக்கம் திறப்பு

தனுஷ்கோடி கடற்கரையில் ரூ.8 கோடியில் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் நேற்று திறக்கப்பட்டு, பார்வையிட சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

Update: 2022-05-14 16:57 GMT
ராமேசுவரம், 
தனுஷ்கோடி கடற்கரையில் ரூ.8 கோடியில் கட்டப்பட்ட  கலங்கரை விளக்கம் நேற்று திறக்கப்பட்டு, பார்வையிட சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
கலங்கரை விளக்கம்
ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி கடற்கரையில் ரூ.8 கோடியில் கலங்கரை விளக்கம் கட்டுவதற்கான பணி கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது.
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த பணி சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது. 
காணொலி காட்சி
இந்த நிலையில் தனுஷ்கோடி கடற்கரையில் கலங்கரை விளக்கத்தை மத்திய கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை மந்திரி சர்பானந்தா சோனாவால் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். சுமார் 50 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டு உள்ள இந்த கலங்கரை விளக்கத்தின் மேல்பகுதியில், அதிக வெளிச்சம் தரும் வகையிலான மின் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. கண்காணிப்பு கேமரா ஒன்றும் மேல்பகுதியில் உள்ளது. 
தனுஷ்கோடி கடற்கரையில் திறக்கப்பட்டுள்ள கலங்கரை விளக்கத்தை காண சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். 
கட்டணம்
கலங்கரை விளக்கத்தின் உள்பகுதியில் இருந்து மேல்பகுதிக்கு பார்வையாளர்கள் சென்றுவர லிப்ட் வசதிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையிலும் அந்த லிப்ட் இன்னும் முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. அதற்கு முன்பே கலங்கரை விளக்கம்  திறக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
லிப்ட் செயல்படாததால் சுற்றுலா பணிகள் 229 படிகளில் ஏறி இறங்கினர். கலங்கரை விளக்கத்தின் உட்பகுதிக்கு சென்று பார்வையிட ஒருவருக்கு ரூ.10 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்