வேலூர் ஜெயிலில் உண்ணாவிரதம்; முருகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்

வேலூர் ஜெயிலில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் முருகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக அவரது வக்கீல் சிறை கைதிகள் உரிமை மையத்தில் தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-14 16:54 GMT
வேலூர்

வேலூர் ஜெயிலில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் முருகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக அவரது வக்கீல் சிறை கைதிகள் உரிமை மையத்தில் தெரிவித்துள்ளார்.

உண்ணாவிரதம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். முருகன் பரோல் கேட்டு பலமுறை மனு அளித்துள்ளார். அவர் மீது பாகாயம் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனை காரணமாக காட்டி பரோல் மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்கும் எனக்கு 6 நாட்களாவது பரோல் வழங்க வேண்டும் என அவர் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.
ஆனால் அவருக்கு பரோல் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் அவர் பரோல் வழங்கக்கோரி 14-வது நாளாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். தொடர்ந்து அவரது உடல்நிலையை ஜெயில் டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர். உண்ணாவிரதத்தை கைவிட ஜெயில் அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில்...

இந்தநிலையில் அவரது வக்கீல் புகழேந்தி, சிறை கைதிகள் உரிமை மையத்துக்கு மனு ஒன்றை அனுப்பினார். அந்த மனுவில், முருகன் பரோல் கேட்டு தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். அவரது உடல்நிலை பலமுறை மோசமான நிலைக்கு சென்றுள்ளது. அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி விழுந்துள்ளார். அவரது அறையில் படுத்த படுக்கையாக உள்ளார். 

சிறை அதிகாரிகள் அவரின் ஆபத்தான தற்போதைய நிலையை கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே, சிறை கைதிகள் உரிமை மையம் இதில் உடனடியாக தலையிட்டு முருகனின் உயிரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்