வடக்கனந்தல் பேரூராட்சியில் துப்புரவு முகாம்
வடக்கனந்தல் பேரூராட்சியில் துப்புரவு முகாம் நடைபெற்றது.
கச்சிராயப்பாளையம்,
வடக்கனந்தல் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் ஒருங்கிணைந்த துப்புரவு முகாம் நடைபெற்றது. இப்பணியை பேரூராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். இதில் அக்கராயப்பாளையம், வடக்கனந்தல், கச்சிராயப்பாளையம், அம்மாப்பேட்டை, வெங்கடாம்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் சாலையோரங்களில் உள்ள முட்செடிகளை துப்புரவு பணியாளர்கள் அகற்றினர். மேலும் கழிவுநீர் கால்வாய்களையும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுகம், துணை தலைவர் தண்டபாணி, இடைநிலை அலுவலர் வைத்திலிங்கம், பேரூராட்சி அலுவலர்கள் லட்சுமணன், ராமச்சந்திரன், துப்புரவு பணி மேற்பார்வையாளர் ராஜா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.