திருவம்பட்டு முத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம்

திருவம்பட்டு முத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

Update: 2022-05-14 16:51 GMT

செஞ்சி, 

செஞ்சி தாலுகா திருவம்பட்டு கிராமத்தில் முத்துமாரி அம்மன் மற்றும் திரவுபதி அம்மன் கோவில்  திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

அன்றைய தினம் முத்துமாரி அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், 3-ம் நாள் விழாவில் திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. தொடர்ந்து 8-ம் திருவிழாவில திரவுபதி அம்மனுக்கு தீ மிதி திருவிழாவும், முத்துமாரி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது.விழாவில் நேற்று முன்தினம் முத்துமாரி அம்மன் தேர் திருவிழா நடைபெற்றது.

 இதையொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் மாலையில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, மீண்டும் நிலையை அடைந்தது.


பின்னர் திரவுபதி அம்மனுக்கு தர்மர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் திருவிழா பங்குதாரர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்