பெண் வக்கீல் நந்தினி உள்பட 2 பேர் கைது
பெண் வக்கீல் நந்தினி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கமுதி,
பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செங்கப்படையில் உள்ள தனியார் சோலார் மின் உற்பத்தி நிலையத்திற்கு போராட்டம் நடத்துவதற்காக மதுரையை சேர்ந்த வக்கீல் நந்தினி, அவரது தங்கை நிரஞ்சனா ஆகியோர் கமுதி வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.