பெண் தூக்குப்போட்டு தற்கொலை

சுரண்டை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-14 16:15 GMT
சுரண்டை:

சுரண்டை அருகே இடையர்தவணை மீனாட்சிபுரம் பகுதியில் வசித்து வந்தவர் ஆறுமுகம் மனைவி திருமலை வடிவு (வயது 59). பீடி சுற்றும் தொழிலாளி. இவர் கடந்த சில வருடங்களாக கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. பல இடங்களில் சிகிச்சை பார்த்தும் சரியாகவில்லை.  இதனால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்தநிலையில்  வீட்டில் திருமலை வடிவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் சுரண்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்சாமி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். திருமலை வடிவு உடலை கைப்பற்றி தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்