ஆனைமலை அருகே கோவில் மீது கல்வீசப்பட்டதை கண்டித்து பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

ஆனைமலை அருகே கோவில் மீது கல்வீசப்பட்டதை கண்டித்து பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

Update: 2022-05-14 16:13 GMT

ஆனைமலை

ஆனைமலை அருகே கோவில் மீது கல்வீசப்பட்டதை கண்டித்து பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

ஆனைமலையை அடுத்த சேத்துமடை அண்ணா நகரில் மாரியம் மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று இரவு 7 மணியளவில் பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

அப்போது யாரோ சில மர்ம நபர்கள் திடீரென்று கோவில் மீது கற்களை வீசினர். இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவர்கள் வெளியே வந்து தேடிப்பார்த்த போது யாரும் இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பக்தர்கள், கோவில் மீது கல் வீசிய மர்ம ஆசாமிகளை கைது செய்யக்கோரி  சேத்துமடை ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதை அறிந்த ஆனைமலை போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

ஆனால் அதை ஏற்க மறுத்த பொதுமக்கள், மர்ம நபர்களை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றனர்.

பின்னர் அவர்கள் போலீசாரின் உறுதிமொழியை ஏற்று கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக அந்த ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 
இதையடுத்து கோவில் மீது கல்வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்