சரத்பவாரை விமர்சித்த மராத்தி நடிகைக்கு, ராஜ் தாக்கரே கண்டனம்

சரத்பவார் குறித்து சர்ச்சை பதிவிட்ட நடிகை கேதகி சிதாலேக்கு ராஜ்தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-05-14 16:06 GMT
கோப்பு படம்
மும்பை,
சரத்பவார் குறித்து சர்ச்சை பதிவிட்ட நடிகை கேதகி சிதாலேக்கு ராஜ்தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார். 
 இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
மிகவும் தவறானது
 இதுபோன்ற எழுத்துக்கள் மராட்டிய கலாசாரத்தில் இல்லை. இது தீங்கு ஏற்படுத்தும் செயல். எனவே அந்த செயலை கடுமையாக கண்டிக்கிறோம். சித்தாந்தத்தை, சித்தாந்தத்துடன் தான் எதிர்கொள்ள வேண்டும். எங்களுக்கு அவருடன் வேறுபாடு உள்ளது. அவை அப்படிதான் இருக்கும். அதற்காக இப்படி அருவருப்பான நிலைக்கு செல்வது மிகவும் தவறானது ஆகும். 
நடவடிக்கை தேவை
மராட்டியத்தை சேர்ந்த பல சாதுக்கள், சிறந்த மனிதர்கள் சரி என்றால் சரி என சொல்லவும், தவறு என்றால் தவறு என சொல்லவும் கற்று கொடுத்து உள்ளனர்.
 இதுபோன்ற செயல்களின் வேரை அறிந்து அதை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்