பலாப்பழம் விற்பனை அமோகம்

பலாப்பழம் விற்பனை அமோகம்

Update: 2022-05-14 15:51 GMT
குண்டடம்:
தற்போது பலாப்பழ சீசனை தொடர்ந்து கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு பல்வேறு பகுதிகளுக்கு பலாப்பழங்கள் விற்பனைக்காக கொண்டு வருப்படுகிறது. அதன்படி வருட வருடம் குண்டடம் வார சந்தைக்கு கொண்டு வருவது வழக்கம். கேரளாவில் ஒரு பலாப்பழம் ரூ.30 முதல் ரூ.60 வரை வாங்கி வாகன வாடகை ஆள்கூலி உள்பட 1 பலம் 100 ரூபாய்க்கு கொள்ள்முதல் செய்யப்படுகிறது. தமிழகத்தில் பலாப்பழம் உற்பத்தி இல்லாததால் இங்கு எப்போதும் பலாப்பழத்திற்கு நல்லவிலை கிடைத்து வருகிறது. 
இதனால் ஒரு பலாப்பழம் ரூ.150 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்படுகிறது. நல்ல லாபமும் கிடைக்கிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பல்வேறு நகரங்களுக்கு சென்று மக்கள் அதிகளவில் கூடும் இடங்கள், சந்தை, பஸ் நிறுத்தம் போன்ற இடங்களில் நிறுத்தி விற்பனை செய்யப்படுகிறது. தற்போது சீசன் முடியும் நிலையில் உள்ளதால் பலாப்பழ விற்பனை சூடு பிடித்துள்ளது என வியாபாரி ஒருவர் கூறினார்.

மேலும் செய்திகள்