வீரபாண்டி:
கிரண்யகசியு என்ற அரக்கனுக்கு பிரம்மாவின் வரத்தை மறக்க விஷ்ணுபகவான் நரசிம்ம அவதாரத்தை எடுத்தார். இதை அனுசரிக்கும் விதமாக மே 14-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பூர்-பல்லடம் சாலை தமிழ்நாடு தியேட்டர் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று காலை 3.25 மணியளவில் நரசிம்ம ஜெயந்தி விழா சிறப்பு வழிபாடுகள் தொடங்கியது. ஆஞ்சநேயர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது. பக்தர்கள் நரசிம்ம ஜெயந்தி விழாவில் கலந்துகொண்டு ஆஞ்சநேயர் சாமியை தரிசித்து ஆசி பெற்றனர்.