கீழ்வேளூர் பகுதியில் வளர்ச்சி பணிகள்

கீழ்வேளூர் பகுதியில் வளர்ச்சி பணிகளை பேரூராட்சிகளின் இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.

Update: 2022-05-14 18:30 GMT
சிக்கல்:
 கீழ்வேளூர் பேரூராட்சி பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை பேரூராட்சிகளின் இணை இயக்குனர் மலையமான் திருமுடிக்காரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக அவர்,  பிள்ளை தெருவாசல் பகுதியில் அமைந்துள்ள திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கினை பார்வையிட்டு மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரிப்பது குறித்த விவரங்களை பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.  பின்னர் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு தகன மேடை கட்டுமானப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  பீச்சுவெளி வாய்க்கால் தூர்வாரும் பணி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  இந்த ஆய்வின் போது தஞ்சை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ், உதவி செயற்பொறியாளர் வரதராஜன், செயல்அலுவலர் சரவணன், பேரூராட்சி தலைவர் இந்திரா காந்தி, துணைத்தலைவர் சந்திரசேகரன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர். .

மேலும் செய்திகள்