தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் திருச்செந்தூர் ரெயிலை மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்

தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் திருச்செந்தூர் ரெயிலை மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்;

Update: 2022-05-14 15:33 GMT

பொள்ளாச்சி

தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் திருச்செந்தூர் ரெயிலை மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

திருச்செந்தூர் ரெயில்

பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் இருந்து கோவைக்கும், பொள்ளாச்சி வழியாக மதுரை, திருவனந்தபுரம், நெல்லை, திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட பகுதிகளுக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த சில மாதங்களாக பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூருக்கு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

பாலக்காட்டில் இருந்து புறப்படும் இந்த ரெயிலில் கேரள மாநில ரெயில் நிலையங்களில் குறைந்த எண்ணிக்கையிலேயே பயணிகள் ஏறுகின்றனர்.

 ஆனால் கோவை மாவட்டத்தில் தென்மாவட்ட மக்கள் லட்சக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். 

எனவே இந்த ரெயிலை மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூருக்கு இயக்கினால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. 

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது

குறைந்த எண்ணிக்கை

பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் பொள்ளாச்சிக்கு காலை 6.35 மணிக்கு வந்து, 6.40 மணிக்கு புறப்படுகிறது.

 பின்னர் மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து வரும் ரெயில் பொள்ளாச்சிக்கு இரவு 8.30 மணிக்கு வந்து 8.35 மணிக்கு புறப்படுகிறது. 


பாலக்காட்டில் இருந்த திருச்செந்தூர் ரெயிலை இயக்குவதால் எந்த பயனும் இல்லை. அதில் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வரை குறைந்த பயணிகளே பயணம் செய்கின்றனர். 

இந்த ரெயிலில் பொள்ளாச்சியில் இருந்து வார நாட்களில் சுமார் 200 பேரும், விடுமுறை நாட்களில் 500 பேர் வரை பயணம் செல்கின்றனர்.

நேரடி ரெயில் இல்லை

திருச்செந்தூர் ரெயிலுக்கு முன்பாக திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வருகிறது. 

அந்த ரெயிலை பாலக்காட்டில் இருந்து பழனி, மதுரை செல்லும் பயணிகள் பயன்படுத்தி கொள்கின்றனர்.

ஆனால் கோவையில் இருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிக ளுக்கு நேரடி ரெயில் சேவை இல்லை. எனவே தென்மாவட்ட மக்கள் பயன்பெறும வகையில் திருச்செந்தூர் ரெயிலை மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்கினால் லட்சக்கணக்கான மக்கள் பயன் பெறுவார்கள். 

மேலும் ரெயில் வேக்கு கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தேவைப் பட்டால் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சிக்கு ஒரு இணைப்பு ரெயிலை இயக்கி கொள்ளலாம்.

ஆன்மிக தலங்கள்

மேட்டுப்பாளையத்தில் இருந்து ரெயிலை இயக்கினால் ஊட்டி, மேட்டுப்பாளையம், கோவை குற்றாலம் போன்ற சுற்றுலா தலங்களுக்கும், மருதமலை, திருச்செந்தூர் முருகன் கோவில், பழனி, வனபத்ரகாளியம்மன், மாசாணியம்மன், தென்காசி காசி விஸ்வநாதர், மதுரை மீனாட்சியம்மன் கோவில் நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்கும் பக்தர்கள் மற்றும் பயணிகள் செல்வதற்கு வசதியாக இருக்கும். 

பொள்ளாச்சியில் இருந்து இயக்கப்பட்ட திருச்செந்தூர் ரெயிலை பாலக்காடு கோட்ட அதிகாரிகள் திட்டமிட்டே பாலக்காடு வரை நீட்டித்து கொண்டனர்.

 ஆனால் கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக பல்வேறு நகரங்களுக்கு ரெயில் இயக்கு வதற்கு பாலக்காடு ரெயில்வே கோட்டம் தடையாக உள்ளது. 

வெற்றிவேல் எக்ஸ்பிரஸ்

எனவே கோவையை தலைமையிடமாக கொண்டு புதிய ரெயில்வே கோட்டம் உருவாக்க வேண்டும். 

தற்போது தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் திருச்செந்தூர் ரெயிலை வெற்றிவேல் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்