தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

நாகை அருகே மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-05-14 18:30 GMT
வெளிப்பாளையம்:
நாகை அருகே மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் திருமணம்
நாகை அக்கரைப்பேட்டை தெற்குதெரு பகுதியை சேர்ந்தவர் வீரசிங்கம். இவருடைய மகன் ராமநாதன் (வயது 32). இவர் கடந்த ஒரு ஆண்டு முன்பு  நாகூர் பகுதியை சேர்ந்த ரேஷ்மா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
 இந்த நிலையில்  ராமநாதனுக்கும் அவரது மனைவி ரேஷ்மாவுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ரேஷ்மா கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். 
தூக்குப்போட்டு தற்கொலை
மனைவி கோபித்துக்கொண்டு சென்றதால்  மன உளைச்சலில் இருந்து வந்த ராமநாதன் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.
 இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ்சிகிச்சை பலனின்றி அவர்,  பரிதாபமாக உயிரிழந்தார். 
இதுகுறித்த புகாரின் பேரில் நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்