மேம்பாலப்பணிகளை மேயர் ஆய்வு

மேம்பாலப்பணிகளை மேயர் ஆய்வு

Update: 2022-05-14 15:19 GMT
திருப்பூர்:
திருப்பூர் ஊத்துக்குளி ரோடு எஸ்.ஆர்.சி. மில் அருகில் ஊத்துக்குளி ரோட்டில் இருந்து ரெயில்வே தண்டவாளத்தை கடந்து கட்டபொம்மன் நகர் வரை மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி தொடங்கி முடிவடையாமல் பாதியில் நிற்கிறது.
குறிப்பாக கட்டபொம்மன் நகர் பகுதியில் பாலம் முடியும் இடத்தில் பாறைக்குழி உள்ளது. அப்பகுதியில் உள்ளவர்கள் வழக்கு தொடுத்ததால் தாமதம் நீடித்தது. இந்தநிலையில் வழக்கு அனைத்தும் முடிக்கப்பட்டு பாறைக்குழியை சீரமைத்து பாலப்பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்தநிலையில் திருப்பூர் மேயர் தினேஷ்குமார் நேற்று மதியம் கட்டபொம்மன் நகர் பகுதியில் மேம்பாலப்பணியை ஆய்வு மேற்கொண்டார். பாறைக்குழியை சீரமைத்து அந்த பகுதியில் இணைப்பு சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைத்து பணியை மேற்கொள்ள மேயர் உத்தரவிட்டார். மேலும் அந்த பகுதியில் நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு கிடைக்காத சிலருக்கும் கிடைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். பாலப்பணிகள் அனைத்தும் இன்னும் 4 மாதத்துக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும் என்று மேயர் தெரிவித்தார்.
ஆய்வின்போது துணை மேயர் பாலசுப்பிரமணியம், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் தங்கவேல், மாநகராட்சி உதவி ஆணையாளர் கண்ணன், மண்டல தலைவர் கோவிந்தராஜ், கவுன்சிலர் செந்தில்குமார் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்