தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட மாநாடு
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க திண்டுக்கல் மாவட்ட மாநாடு நடந்தது.;
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட மாநாடு நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் மகுடபதி தலைமை தாங்கினார். செயலாளர் வீரகடம்ப கோபு முன்னிலை வகித்தார். மாநில செயலாளர்கள் ராஜசேகர், செல்வக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாநாட்டில், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ள கழிப்பறைகளை பராமரிப்பதற்கு தனியாக ஊழியர்களை நியமிக்க வேண்டும். பெரிய ஊராட்சிகள் 60 ஆண்டுகளாக பிரிக்கப்படாமல் உள்ளது. அவற்றை உடனே பிரிக்க வேண்டும். 25 ஊராட்சிகளுக்கு மேல் உள்ள ஊராட்சி ஒன்றியங்களை 2 ஆக பிரிக்க வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றுபவர்களுக்கு பணி நெருக்கடி கொடுக்கக்கூடாது. அவர்களுக்கான சம்பளத்தை குறிப்பிட்ட தேதிக்குள் வழங்க வேண்டும். சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியம் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக மாவட்ட நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மாநில தணிக்கையாளர் ஜம்ரூத் நிஷா தேர்தல் அலுவலராக செயல்பட்டு மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்தார்.