2 பேருக்கு அரிவாள் வெட்டு
கோவில் திருவிழா நடத்துவதில் ஏற்பட்ட தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.;
உப்புக்கோட்டை:
உப்புக்கோட்டையை சேர்ந்தவர்கள் வீரகாளீஸ்வரன் (வயது 23), அசோக் குமார் (19). இவர்களுக்கும், அப்பகுதியை சேர்ந்த மன்மதராஜா, அருண், இளையராஜா, சுருளி, தனபாண்டி, தர்மராஜ், ஜீவன், அருண்குமார் ஆகியோருக்கும் இடையே உப்புக்கோட்டை வடக்கு தெருவில் உள்ள மண்டு கருப்பசாமி கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக தகராறு இருந்து வந்தது.
இந்தநிலையில் கோவில் திருவிழாவையொட்டி கடந்த 13-ந்தேதி அங்கு ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது மன்மதராஜா தலைமையிலான 8 பேர் சேர்ந்து வீரகாளீஸ்வரன், அசோக்குமார் ஆகியோரை கத்தி மற்றும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.