காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மாயமான சிறுமி கிணற்றில் பிணமாக மீட்பு
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு மாயமான பெண் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தா.பேட்டை, மே.15-
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு மாயமான பெண் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலுக்கு எதிர்ப்பு
தா.பேட்டையை அடுத்த ஜெம்புநாதபுரம் போலீஸ் சரகம் சின்னசேலம்பட்டி நாயக்கர் தெருவை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி சந்திரா. இந்த தம்பதியின் மகள் சங்கீதா (வயது 17).
இந்தநிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுந்தரம் இறந்துபோனார். இதனிடையே சங்கீதா உறவினர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அவர் அண்ணன் உறவுமுறை வருவதாக தெரிகிறது. இதனால் காதலுக்கு சங்கீதா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட சங்கீதா கடந்த 2 நாட்களுக்கு முன்பு சாமி கும்பிட்டு வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சின்னசேலம்பட்டி பகுதியில் உள்ள கிணற்றில் சங்கீதா பிணமாக மிதப்பதாக ஜெம்புநாதபுரம் போலீஸ் நிலையத்திற்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர்.
காதல் தோல்வியால் தற்கொலையா?
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் கிணற்றில் பிணமாக மிதந்த சங்கீதாவின் உடலை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காதல் தோல்வியில் சங்கீதா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்தும் போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.