வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு
நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
நீடாமங்கலம்:-
நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனைமுன்னிட்டு வீர ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர், விஸ்வக்சேனர் ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கட ஹர மங்களமாருதி ஆஞ்சநேயர், ஆலங்குடி அபயவரதராஜ பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.
கூத்தாநல்லூர் அருகே பழையனூரில் உள்ள சாத்தனூர் வெங்கட்ரமணசாமி கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. அப்போது சாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமிக்கு வடைமாலை, அருகம்புல் மாலை மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.