புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை

ஆலங்குளம் அருகே திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-14 13:52 GMT
ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஊத்துமலையை அடுத்த சீவலசமுத்திரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். இவருக்கும், உறவினரான மானிஷாவுக்கும் (வயது 19) கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி திருமணம் நடந்தது.

இந்த நிலையில் மானிஷாவுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த நிலையில் இருந்தார். அவர் கடந்த 8-ந் தேதி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார்.
உடனே அவரை சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மானிஷா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 2 மாதங்களில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்ததால், தென்காசி உதவி கலெக்டர் கங்காதேவி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்