ஜி.எஸ்.டி. உயர்வுக்கு எதிர்ப்பு: நாமக்கல்லில் அச்சகங்கள் மூடல்

ஜி.எஸ்.டி. உயர்வுக்கு எதிர்ப்பு: நாமக்கல்லில் அச்சகங்கள் மூடல்;

Update: 2022-05-14 12:57 GMT
நாமக்கல்:
காகிதம், அச்சு மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. அவற்றிற்கான ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு மாஸ்டர் பிரிண்டர்ஸ் பெடரேசன் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதையொட்டி மாநிலம் முழுவதும் உள்ள அச்சக உரிமையாளர்கள், அச்சகங்களை மூடி போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் நாமக்கல் மாவட்டத்திலும் நேற்று நூற்றுக்கணக்கான அச்சகங்கள் மூடப்பட்டு இருந்தன. குறிப்பாக நாமக்கல் நகரில் குளக்கரை சந்து பகுதியில் அனைத்து அச்சகங்களும் மூடப்பட்டு இருந்ததை காணமுடிந்தது.

மேலும் செய்திகள்