பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு
பெரியகுளம் மகாலட்சுமி கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே ஈச்சமலை பகுதியில் மகாலட்சுமி கோவில் உள்ளது. பிரதோஷத்தையொட்டி நேற்று முன்தினம் அங்குள்ள சிவன் மற்றும் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.
நந்திகேஸ்வரருக்கு பல்வேறு பொருட்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது. மேலும் கோவிலில் உள்ள அம்மன் வேப்பிலையால் அலங்கரிக்கப்பட்டது.
இந்த பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.