டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து

வந்தவாசி அருகே டிப்பர் லாரி கவிழ்ந்து டிரைவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2022-05-14 11:49 GMT
வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா வடமனப்பாக்கம் பெரியார் தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 47), லாரி டிரைவர். இவர் வந்தவாசியில் உள்ள கல்குவாரியில் ஜல்லிக்கற்கள் ஏற்றுவதற்காக காஞ்சீபுரம் சாலை வழியாக வந்தவாசியை நோக்கி டிப்பர் லாரியை ஓட்டி வந்து கொண்டிருந்தார். 

வந்தவாசியை அடுத்த சவேரியாரபாளையம் அருகே வரும்போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய டிப்பர் லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

அதில் லாரி டிரைவர் பெருமாள் படுகாயம் அடைந்தார். அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்