இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் சாமி தரிசனம்

ஸ்ரீரங்கம், மே.15-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் நேற்று வருகை தந்தார். அவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், அர்ச்சகர் சுந்தர் பட்டர் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். அவர் கருடாழ்வார், மூலவர் ரெங்கநாதர், தாயார், சக்கரத்தாழ்வார், ராமானுஜர் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார்.