கிணற்றில் மூழ்கி வாலிபர் சாவு

தூசி அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update: 2022-05-14 11:43 GMT
தூசி

காஞ்சீபுரம் பெருந்தேவி நகரை சேர்ந்தவர் சாந்தாராம். இவருடைய மூத்த மகன் சதீஷ்குமார், இளைய மகன் ஜெகதீஸ் (வயது 18). இருவரும் நண்பர்களுடன் திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே பல்லாவரம் கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். 

அப்போது ஜெகதீசுக்கு நீச்சல் தெரியாததால் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இவருடைய தந்தை சாந்தாராம் கொடுத்த புகார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்