கொண்டலாம்பட்டி அருகே மின்சாரம் தாக்கி பெண் சாவு
கொண்டலாம்பட்டி அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்தார்.;
கொண்டலாம்பட்டி,
கொண்டலாம்பட்டி அருகே உள்ள பி. நாட்டாமங்கலம் கரட்டூர் பகுதி சிலோன் காலனியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 45). இவருடைய மனைவி ஜமுனா தேவி (42). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஜமுனாதேவி நேற்று காலை துணிகளை துவைத்து அதனை காய வைப்பதற்காக கம்பியில் போட்டுக்கொண்டிருந்தார். நேற்று முன்தினம் பெய்த மழையால் கம்பி ஈரமாக இருந்துள்ளது. மேலும் அந்த கம்பியில் வீட்டுக்கு வரக்கூடிய மின்சார வயரும் பொருத்தி இருந்ததால் அது பழுதடைந்த நிலையில் இருந்துள்ளது. மேலும் மழை பெய்ததால் கம்பியில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதை கவனிக்காமல் ஜமுனாதேவி துணியை காயபோட்டதால், அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், சப்-இன்ஸ்பெக்டர் கவுரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.