புத்திர கவுண்டம்பாளையம் முத்துமலை முருகன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்

புத்திர கவுண்டம்பாளையம் முத்துமலை முருகன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்.

Update: 2022-05-13 22:31 GMT
பெத்தநாயக்கன்பாளையம், 
சேலம் மாவட்டம் புத்திர கவுண்டம்பாளையத்தில் 146 அடி உயரம் கொண்ட முத்துமலை முருகன் கோவில் உள்ளது. அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அவருடைய மனைவி ராதா மற்றும் குடும்பத்தினருடன் வந்து சாமி தரிசனம் செய்தனர். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் ஸ்ரீதர் மற்றும் குடும்பத்தினர் பூரண கும்ப மரியாதை செலுத்தி கோவிலுக்குள் அழைத்து சென்றனர். பின்னர் சாமியின் கையில் வைத்திருக்கும் வேலுக்கு முதன் முதலாக பால் அபிஷேகத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து சாமிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் முருகன், வள்ளி- தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், செம்மலை, எம்.எல்.ஏ.க்கள் ஜெய்சங்கரன், சித்ரா, ராஜமுத்து, நல்லதம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன் செய்திருந்தார். கோவிலில் அன்னதானத்தையும் எடப்பாடி பழனிசாமி தனது கையால் தொடங்கி வைத்தார். 

மேலும் செய்திகள்