செவிலியரை தாக்கி ரூ.20 ஆயிரம் தங்கச்சங்கிலி பறிப்பு

செவிலியரை தாக்கி ரூ.20 ஆயிரம் தங்கச்சங்கிலியை மர்மநபர்கள் பறித்தனர்;

Update: 2022-05-13 22:24 GMT
பெங்களூரு: பெங்களூரு பனசங்கரி பகுதியை சேர்ந்தவர் சுதாமணி. செவிலியரான இவர் பணி முடிந்ததும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சுதாமணியை வழிமறித்து அவரது தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சுதாமணியின் முகத்தில் சரமாரியாக குத்தினர். 

இதில் அவர் நிலைகுலைந்தார். பின்னர் அவர் கழுத்தில் கிடந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான தங்கச்சங்கிலியை பறித்துவிட்டு 2 பேரும் தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து சுதாமணி அளித்த புகாரின்பேரில் பனசங்கரி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்