கழுத்தில் காயத்துடன் பெண் மயில் மீட்பு

கழுத்தில் காயத்துடன் பெண் மயில் மீட்கப்பட்டது.;

Update: 2022-05-13 22:05 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலையில் தில்லை நகர் பகுதியில் நேற்று மாலை மயில் ஒன்று கழுத்தில் அடிபட்டு காயத்துடன் சுற்றித்திரிந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் பெரம்பலூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற வனத்துறையினர் கழுத்தில் அடிபட்டு காயத்துடன் வலியில் துடித்த அந்த பெண் மயிலை மீட்டு சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் செய்திகள்