சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தாலும் மாநகராட்சி தேர்தலை நடத்த அரசுக்கு விருப்பம் இல்லை-காங்கிரஸ் குற்றச்சாட்டு

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தாலும் மாநகராட்சி தேர்தலை நடத்த அரசுக்கு விருப்பம் இல்லை என காங்கிரஸ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது

Update: 2022-05-13 21:48 GMT
பெங்களூரு: பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் செயல் தலைவர் ராமலிங்க ரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தாமல் கடந்த 20 மாதங்களாக அரசு தள்ளிப்போட்டு வந்த வண்ணம் உள்ளது. பெங்களூரு மாநகராட்சி தேர்தலை உடனடியாக நடத்த உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. தற்போது மாநகராட்சி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கும்படி சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தாலும், பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்துவதற்கு அரசுக்கு விருப்பம் இல்லை. மாநகராட்சி தேர்தலை நடத்துவதற்கு அரசு ஆர்வம் காட்டவில்லை.

மாநகராட்சி தேர்தலை தள்ளிப்போடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது. மாநகராட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதாலும், கவுன்சிலர்கள் இல்லாததாலும் நகரில் வளர்ச்சி பணிகள் சரியாக நடைபெறாமல் உள்ளது. கோர்ட்டு தீீர்ப்பை மதித்து மாநகராட்சி தேர்தலை உடனடியாக நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ராமலிங்க ரெட்டி கூறினார்.
மேலும் ராமலிங்க ரெட்டி மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் சேர்ந்து மாநகராட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்