குண்டு கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

நெல்லையில் குண்டு கற்கள் ஏற்றி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-05-13 21:34 GMT
நெல்லை:
முன்னீர்பள்ளம் போலீசார் வானியன்குளம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் வந்த ஒரு டிப்பர் லாரியை மறித்து சோதனை செய்தனர். அதில் உரிய அனுமதியின்றி குண்டு கற்கள் ஏற்றி வந்தது தெரியவந்தது.
அப்போது லாரி டிரைவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடி விட்டார். இதனையடுத்து போலீசார் குண்டு கற்களை லாரியுடன் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்