சாலை நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் லாரி மோதி விபத்து
சாலை நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் லாரி மோதி விபத்தில் சிக்கியது.
ஈரோடு
ஈரோடு அருகே உள்ள லக்காபுரத்தை அடுத்த முத்துக்கவுண்டன் பாளையம் பகுதியில் நேற்று காலை லாரி ஒன்று ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக அந்த லாரி நிலைதடுமாறி, சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதியது. உடனடியாக லாரி நிறுத்தப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை. லாரியில் இருந்த நிலக்கரி மாற்று லாரியில் ஏற்றி அனுப்பப்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.