தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுவதில் மாற்றம்
தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுவதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 7 முன்னணி தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்தனர். முகாமில் கலந்து கொண்ட 42 பேரில், 3 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. 11 பேர் 2-ம் கட்ட தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர்கள் சண்முகம், செல்வகுமார் ஆகியோர் செய்திருந்தனர். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெற்று வந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் இனிவரும் காலங்களில் மாதத்தில் 2-வது, 4-வது வார வெள்ளிக்கிழமையில் நடைபெற உள்ளது.