முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் லண்டன் பயணம் திடீர் ரத்து
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் லண்டன் பயணம் திடீர் ரத்தாகியுள்ளது
பெங்களூரு: கர்நாடக முதல்-மந்திரியாக இருந்து வருபவர் பசவராஜ் பொம்மை. இந்த நிலையில், வருகிற 19-ந் தேதி பசவராஜ் பொம்மை இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனுக்கு செல்ல இருந்தார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் லண்டன் பயணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதாவது வருகிற 21-ந் தேதி சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டாவோசில் உலக பொருளாதார மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மந்திரி முருகேஷ் நிரானி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். டாவோசில் நடைபெறும் மாநாட்டில் உலக முதலீட்டாளர்கள் ஏராளமானவர்கள் பங்கேற்பார்கள், அவர்களிடம் கர்நாடகத்தில் முதலீடு செய்யும்படி நேரடியாக அழைப்பு விடுக்கமுடியும் என்பதால், லண்டன் பயணத்தை ரத்து செய்துவிட்டு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை டாவோஸ் செல்ல உள்ளார். ஏனெனில் கர்நாடகத்தில் நவம்பர் மாதம் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு தொழில் முதலீட்டாளர்களை இழுக்க, உலக பொருளாதார மாநாட்டுக்கு வரும் முதலீட்டாளர்களுடன் பேசுவதற்காக லண்டன் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.