கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் மீட்பு
கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் மீட்கப்பட்டது.;
ஆதனக்கோட்டை,
ஆதனக்கோட்டையிலிருந்து வத்தனாக்கோட்டை செல்லும் சாலையில் ரெங்கராசு என்பவருக்கு சொந்தமான 50 அடி ஆழமுள்ள விவசாய கிணறு உள்ளது. நேற்று காலையில் அந்த கிணற்றில் புள்ளிமான் ஒன்று தவறி விழுந்து தண்ணீரில் மிதப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, வனவர் ரவிச்சந்திரன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் உயிருக்கு போராடிய புள்ளிமானை மீட்டு வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.