பீரோைவ உடைத்து 7¾ பவுன் நகை திருட்டு
சாத்தூர் அருகே பீரோைவ உடைத்து 7¾ பவுன் நகையை திருடி சென்றனர்.
சாத்தூர்,
சாத்தூர் குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் சாந்தி (வயது 59). இவரது மகன் ராம்மோகன் சிவகாசியில் தங்கி வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் சாந்தி, உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு சிவகாசியில் உள்ள மகன் வீட்டில் தங்கியுள்ளார். சம்பவத்தன்று மாலை அவரது வீட்டின் அருகில் உள்ளவர்கள் சாந்திக்கு போன் செய்து வீட்டின் பின்பக்க கதவு திறந்து இருப்பதாக கூறியுள்ளனர். உடனே சாந்தி வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு மற்றும் அறையின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே உள்ள பீரோவும் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 7¾ பவுன் நகை திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து சாந்தி அளித்த புகாரின் பேரில் சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.