மணல் கடத்திய டிரைவர் கைது

மணல் கடத்திய டிராக்டர் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-13 20:08 GMT
அன்னவாசல், 
இலுப்பூர் அருகே பாக்குடி பகுதியில் சிலர் மணல் கடத்துவதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாக்குடி பஸ் நிறுத்தம் வழியாக சென்ற ஒரு டிராக்டரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக பாக்குடியை சேர்ந்த டிரைவர் சதீஷ்குமார் (வயது 23) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்