அரசு பஸ் டிரைவர் - போலீசாருக்கு இடையே வாக்குவாதத்தால் பரபரப்பு

சாத்தூரில் அரசு பஸ் டிரைவர், போலீசாருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2022-05-13 20:04 GMT
சாத்தூர், 
சாத்தூரில் அரசு பஸ் டிரைவர், போலீசாருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
வாக்குவாதம் 
சாத்தூர் அருகே உள்ள படந்தால் சந்திப்பு சாலையில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது சாத்தூரில் இருந்து  தாயில்பட்டி வழியாக சிவகாசி செல்லும் அரசு பஸ் ஒன்று வந்தது. இந்த பஸ்சை டிரைவர் செந்தில்குமார் ஓட்டி வந்தார். 
அப்போது அந்த பஸ்சை போக்குவரத்து போலீசார் நிறுத்த சொல்லியும், நிறுத்தாமல் ஒலி ஒலித்தபடி சென்றதாக கூறப்படுகிறது. 
இந்தநிலையில் நான்கு வழிச்சாலையின் நடுவே பஸ்சை நிறுத்தி இறங்கி சென்ற டிரைவர், போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 
பேச்சுவார்த்தை 
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த  சாத்தூர் நகர் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 
 போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல் பஸ்சை உடனடியாக எடுத்து செல்லும் படி அவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து டிரைவர் அரசு பஸ்சை அங்கிருந்து எடுத்து சென்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்