எஸ்.புதூர் அருகே பிரதோஷ வழிபாடு

எஸ்.புதூர் அருகே உலகம்பட்டியில் உள்ள உலகநாயகி சமேத உலகநாத சாமி கோவிலில் பிரதோச வழிபாடு நடைபெற்றது.

Update: 2022-05-13 19:28 GMT
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே உலகம்பட்டியில் உள்ள உலகநாயகி சமேத உலகநாத சாமி கோவிலில் பிரதோச வழிபாடு நடைபெற்றது. இதில் நந்தீஸ்வரர் மற்றும் உலகநாத சாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சாமிகள் ரிஷப வாகனத்தில் உள்மண்டப பிரகாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்