மகாகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா
மகாகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடந்தது
திட்டச்சேரி
நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்டுமாவடியில் மகா காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல, இந்த ஆண்டிற்கான திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று காலை சிவன்கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை, மகா காளியம்மனுக்கு காவடி எடுத்தல், அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்தல், கஞ்சிவார்த்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.