கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்

திருவாரூரில் நடந்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பயிற்சி முகாமை தாசில்தார் நக்கீரன் தொடங்கி வைத்தார்.;

Update: 2022-05-13 19:11 GMT
திருவாரூர்:
திருவாரூரில் நடந்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பயிற்சி முகாமை தாசில்தார் நக்கீரன்  தொடங்கி வைத்தார்.
பயிற்சி முகாம்
திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான நில அளவை உட்பிரிவு பட்டா மாறுதலுக்கான பயிற்சி முகாம் நடந்தது. இந்த பயிற்சி முகாமை தாசில்தார் நக்கீரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வருவாய்த்துறையின் மிக முக்கியமான பணி நில அளவை பணியாகும். நில அளவை கணக்குகள் முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. இந்த நில அளவை பயிற்சிகள் கிராம நிர்வாக அலுவலக பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கு மிகவும் உதவிக்கரமாக இருக்கும். 
சந்தேகங்கள்
இந்த பயிற்சியினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நில அளவையில் உட்பிரிவு பட்டா மாறுதல் செய்வதில் உள்ள சந்தேகங்களை தெளிவாக கேட்டு அறிந்து கொண்டு பணிகளை விரைவாகவும், சிறப்பாகவும் செய்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் நில அளவை அலுவலர் கண்ணன், மண்டல துணை தாசில்தார் ராமச்சந்திரன், வட்ட துணை ஆய்வாளர் ரஞ்சித்குமார் மற்றும் திருவாரூர் வட்டத்தை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்