மதுரை பாலரெங்காபுரம் குடோனில் இருந்து கரூருக்கு உரமூடைகளை ஏற்றிக்கொண்டு லாரி சென்றது. இந்த லாரி, நேற்று அதிகாலை அரசரடி பிரதான சாலையில் வந்தபோது திடீரென நிலைதடுமாறி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்கு உள்ளானது. அதிகாலை ேநரத்தில் இந்த விபத்து நடந்ததால் அதிர்ஷ்டவசமாக விபரீதம் ஏற்படவில்லை.