மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்பு
மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
திருச்சி:
திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலியர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. அரசு மருத்துவமனை டீன் வனிதா தலைமை தாங்கி, செவிலியர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, கொரோனா கால கட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களின் பணியை பாராட்டி பேசினார். இதில் அரசு மருத்துவமனை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அருள்ஜோதி, இருக்கை மருத்துவ அதிகாரி டாக்டர் கயல்விழி மற்றும் டாக்டர்கள், 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர். விழாவில் செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். செவிலியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.